பால், பிஸ்தா 1 கப்: பொங்கலுக்கு இந்த இனிப்பு செய்து அசத்துங்க

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வீடுகளில் இனிப்பு, கார வகைகள் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வோம். அந்த வகையில் புதுவிதமாக பிஸ்தா பர்ஃபி இனிப்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
பால் பவுடர் – ½ கப்
சர்க்கரை – 250 கிராம்
நெய் – தேவையான அளவு
நறுக்கப்பட்ட பிஸ்தா – தேவையான அளவு
பிஸ்தா எஸ்ட்ராக்ட் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றவும். பால் பவுடரை சேர்த்து, கலவையை கிளறவும். இந்தக் கலவையில் அடுத்து பாலை ஊற்றி நன்கு கலக்கவும். பால் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கலவை ஒரு மென்மையான மாவாக ஒன்றாக திரண்டு வரும். கலவை கெட்டியாக இருந்தால், மற்றொரு ஸ்பூன் பால் சேர்க்கலாம்.
பின்னர் அதில் பொடித்த சர்க்கரை, பிஸ்தா எஸ்ட்ராக்ட் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். கலவையில் பிஸ்தாவை சேர்த்து அதை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் கொஞ்சம் நறுக்கிய பிஸ்தா துண்டுகளை மேலே சேர்க்கவும். 2-4 மணி நேரம் வரை நன்கு காயவிடவும். பின்னர் விருப்பமான வடிவங்களில் நறுக்கி கொள்ளலாம். அவ்வளவு தான் பொங்கலுக்கு சுவையான பிஸ்தா பர்ஃபி ரெடி.