அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தந்தை காலமானார்..!
மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி (94) காலமானார்.
வயது மூப்பு, உடல்நலம் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (பிப்.23) உயிரிழந்தார்.
இவர் திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அண்ணா, கலைஞர் ஆகியோரின் மீதான ஈர்ப்பால் திராவிட அரசியலை தமிழகம் முழுவதும் பரப்பியவர். அவரது மறைவிற்கு திமுக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.