அயோத்தி ராமர் கோயிலில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள்..!

அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக 3 ஆயிரம் விவிஐபிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 5 வயது குழந்தையின் உருவில் இருக்கும் ராம் லல்லா சிலைக்கு இன்று பிரன்ன பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

பழங்கால நாகவரா கட்டடக்கலை அம்சத்துடன் ராமர் கோயிலை வடிவமைத்துள்ளனர்.
மொத்தம் மூன்று மாடிகள் கொண்டதாக இருக்கும். தற்போது தரைத்தளம் மட்டும் தயாராகியுள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. எஞ்சிய இரண்டு மாடிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும்.
கோயிலின் நீளம் 380 அடியும், அகலம் 250 அடியும், உயரம் 161 அடியும் கொண்டது.
ஒவ்வொரு தளத்தின் உயரமும் 20 அடி உயரம் கொண்டதாக இருக்கும். ராமர் கோயில் முழுவதும் 392 தூண்களும், 44 கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ராம் லல்லா சிலை தரைத்தளத்தில் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தூணிலும் ராமர், சீதை, ஹனுமன், லட்சுமணன் உள்ளிட்ட கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் நுழைவு வாயில் 32 படிக்கட்டுகள் இருக்கின்றன. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராமரை தவிர்த்து சூரியன், பகவதி அன்னை, கணபதி, சிவபெருமான் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
மேலும் மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், நிஷத்ராஜ், மாதா சபரி, ரிஷி பட்னி தேவி அஹில்யா ஆகியோருக்கு தனித்தனி கோயில்கள் அமைக்கப்பட உள்ளன.
ராமரின் கோயிலின் வடக்கு எல்லையில் அன்னபூர்ணா அன்னைக்கும், தெற்கு எல்லையில் ஹனுமனுக்கும் கோயில்கள் அமைந்துள்ளன.
ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீதா தேவி அமர்ந்திருந்த கிணறு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கோயிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர். இதில் கட்டமைக்கப்பட்ட பரப்பளவு சுமார் 57,000 சதுர அடி. இது மூன்று மாடிகள் கொண்ட கட்டமைப்பாக உள்ளது. இரும்பின் ஆயுட்காலம் 80-90 ஆண்டுகள் மட்டுமே. எனவே, கோயிலில் இரும்போ, எஃகு-வோ பயன்படுத்தப்படவில்லை. கோயிலின் உயரம் 161 அடி. இது குதுப் மினாரின் உயரத்தில் 70 சதவீதமாகும்”

அயோத்தி ராமர் கோயிலின் வடிவமைப்பு குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பாரம்பரியமிக்க சோம்புரா குடும்பத்தின் கலை முயற்சியில் உருவாகியுள்ளது. உலகளவில் 100க்கும் மேற்பட்ட கோயில்களை சோம்புரா குடும்பம் வடிவமைத்துள்ளது.இவரது குடும்பம் 15 தலைமுறைகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கோயில் கட்டிடங்களை வடிவமைத்து வருகிறது.

இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில், 235 அடி அகலம், 360 அடி நீளம், 161 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக கோயில் உருவாகியுள்ளது.

கம்போடியாவின் அங்கோர் வாட், அமெரிக்காவின் சுவாமிநாராயண் அக்சர்தாம் கோயில்களுக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மிகப்பெரிய கோயிலாக இது மாறும். 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கோயிலில் 366 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவனின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் 18 சிலைகள், 10 தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள், சரஸ்வதி தேவியின் 12 வடிவங்களை உள்ளடக்கியுள்ளது.

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான மரக்கதவுகளை தமிழ்நாட்டை சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் அழகுற வடிவமைத்துள்ளார்.

57,400 சதுரஅடியில் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன. கோயிலுக்காக மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முக்கியப் பகுதியான கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராமர் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

2,100 கிலோ எடையுள்ள மணி எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக கட்டப்பட்டுள்ள கோயிலில் பல கட்ட சோதனைகள் நடத்தி, உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பிரத்யேக முறையான ‘பூட்டு’, ‘சாவி’ அடிப்படையிலான பொறியியல் முறையில் கற்கள் இணைக்கப்பட்டு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 2, 500 ஆண்டுகள் வரை, நிலநடுக்கத்தை கூட எதிர்த்து நிற்கும் வகையில் இக்கோயில் 3 மாடி கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் கோயிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *