மோடி அரசு குறிவைக்கும் 3 திட்டங்கள்.. பட்ஜெட்டில் டக்கரான அறிவிப்பு வரலாம்..!!
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திரும்பியுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட் தாக்கல் முழு பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் ஆக இருக்கும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 அன்று தொடங்கும்.
இரு அவைகளின் கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் உரையுடன் ராஜ்யசபா மற்றும் லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி அடுத்த நாள் மக்களவையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பட்ஜெ வரும் ஓரே காரணத்தால், பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின் படி பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் என்றாலும் சில குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள் முக்கிய டார்கெட்டாக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி அல்லது PM-கிசான் திட்டத்தின் கீழ் அரசு நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கும் தற்போதைய 6,000 ரூபாய் தொகையில்இருந்து சுமார் 50% உயர்த்தி 9,000 ரூபாய் வரையிஸ் உயர்த்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கின்றனர். இதேபோல் இந்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசின் வீட்டுத் திட்டம் அதாவது பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய விரிவாக்கமும், வேலைகள் உருவாக்குவதற்கான உந்துதல் எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் திட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு சுமார் 60000 கோடி ரூபாய் அளவிலான பணத்தை ஓதுக்கீடு செய்தது.
இதனால் இந்த பட்ஜெட் அறிக்கையில் கூடுதலாக தொகையை ஒதுக்கீடு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே MGNREGS திட்டத்திற்து மத்திய அரசு சார்ப்பில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 60000 ரூபாய் நிதியோடு கூடுதலாக 14,524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை நேரடியாக சென்றடையும் இந்த 3 முக்கிய திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.