போஸ்ட் ஆபீஸ்-ல் மோடி அரசின் சோலார் திட்டம் வந்தாச்சு.. மாதம் ரூ.1500 பெறுவது எப்படி..?!
சென்னை: 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின்சாரப் பேனல்களை நிறுவுவதற்கான நிதி உதவியை வழங்கும் பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் பதிவு செயல்பாட்டை இந்திய தபால் துறை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் சோலார் மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கு நிதி உதவி, மானியம், இலவச மின்சாரம் என பல சலுகைகளைப் பெற முடியும். இத்திட்டத்தின் பதிவு செயல்பாட்டில் மக்களுக்கு உதவத் தபால் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
தபால் அலுவலகம்: இத்திட்டம் நாட்டின் அனைத்து நகரங்கள், கிராமங்கள் வரையில் சென்றடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தபால் துறை வாயிலாக இத்திட்டத்திற்குப் பதிவு முறையைத் துவங்கியுள்ளது.
கூடுதல் தகவல்: மக்கள் இத்திட்டம் குறித்துக் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம். இல்லையெனில் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா என்றால் என்ன?: வீடுகளின் மொட்டை மாடியில் அல்லது கூரையின் மேல் சோலார் பேனல் அமைப்புகளை நிறுவும் வீடுகளுக்கு, மத்திய அரசு இலவச மின்சாரம் வழங்க வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. ஒவ்வொரு மாதமும், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.
மானியத் தொகை: தற்போதைய ஒப்பீட்டு விலைகளின் அடிப்படையில், 1 கிலோவாட் அமைப்புக்கு ரூ.30,000, 2 கிலோவாட் அமைப்புக்கு ரூ.60,000, 3 கிலோவாட் அமைப்பு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு ரூ.78,000 மானியம் வழங்கப்படும் என்று PIB வெளியீடு தெரிவிக்கிறது.
குறைந்த வட்டி கடன்: பிஎம் சூர்யா கர் – முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோவாட் வரையிலான சோலார் அமைப்புகளை நிறுவ, தற்போது சுமார் 7% பிணையமில்லாத குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட உள்ளது.
பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி:
படி 1: https://pmsuryaghar.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்யும் போது, இந்த தகவல்களை எல்லாம் வழங்க வேண்டும். முதலில் உங்கள் மாநிலம் மற்றும் மின்சார விநியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்; உங்கள் மின் நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
படி 2: மின் நுகர்வோர் எண் மற்றும் மொபைல் எண் கொண்டு உள்நுழையவும்; படிவத்தின்படி ரூஃப்டாப் சோலார் மின்சாரத்திற்கு விண்ணப்பிக்கவும்.
படி 3: சோலார் அமைப்புகளை நிறுவச் சாத்தியம் என ஒப்புதல் கிடைத்ததும், உங்கள் டிஸ்காம் (DISCOM) அதாவது மின்சார விநியோக நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட லோசார் நிறுவனத்தின் வாயிலாக நிறுவவும்.
படி 4: வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைக்கும் பணி முடிந்ததும், விவரங்களைச் சமர்ப்பித்து மீட்டர் (net meter) அமைப்பதற்கு விண்ணப்பிக்கவும்.
படி 5: நெட் மீட்டர் மற்றும் டிஸ்காம் மூலம் ஆய்வு செய்த பிறகு, போர்ட்டலில் இருந்து கமிஷன் சான்றிதழ் உருவாக்கப்படும்.
படி 6: கமிஷன் ரிப்போர்ட் கிடைத்தவுடன், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை போர்டல் மூலம் சமர்ப்பிக்கவும். 30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் மானியத்தைப் பெறுவீர்கள்.