மோடி ஜி… காங்கிரஸ் கட்சியைப் பார்த்து பயப்பட வேண்டாம் : ராகுல் காந்தி..!
புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான்,காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித்துறை விதித்துள்ளது. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தால் எங்களால் பணத்தை எடுக்க முடியாது. இதுவெறும் வங்கிக் கணக்கு முடக்கமல்ல, ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய ராகுல் காந்தி,காங்கிரஸ் கட்சியைப் பார்த்து மோடி பயப்பட வேண்டாம். காங்கிரஸ் பண வலிமைமிக்க கட்சியல்ல, மக்கள் வலிமைமிக்க கட்சி.சர்வாதிகாரத்தைப் பார்த்து இதுவரை நாங்கள் அடிபணிந்தது இல்லை. இனியும் அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தைக் காக்க எங்கள் தொண்டர்களுடன் தொடர்ந்து போராடுவோம் என கூறினார்.