மனைவியைக் கைவிட்ட மோடி, ராமர் கோயில் பூஜையில் பங்கேற்பதா?: பாஜக தலைவர்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பூஜைகளில் மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி அனுமதிக்க முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போர் செய்து தன் மனைவியை மீட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோயில் பூஜைக்கு அனுமதிக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.
வரும் ஜனவர் 22 ஆம் நாள் நடைபெறவிருக்கும் பூஜையில், பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்தக் கருத்தை சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார்.
மேலும், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், அவர் அதில் பங்கேற்கப் போவதில்லை என அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ‘மத வழிபாடுகள் என்பது தனி மனிதனின் விருப்பம், அதை அரசியல் பலன்களுக்குக் கருவியாக பயன்படுத்துவது முறையற்றது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.