‘2024ல் மீண்டும் பிரதமராகும் மோடி’.. கணித்த ‘நியூ நோஸ்ராடாமஸ்’! ஆஹா இவர் சொன்னா அப்படியே பலிக்குமே!
அடுத்த ஆண்டு நம் நாட்டில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்பது பற்றி இங்கிலாந்தை சேர்ந்த ‘நியூ நோஸ்ராடாமஸ்’ என பெயர் பெற்ற கிரேக் ஹாமில்டன் கணித்து கூறியுள்ளார். இவரது முந்தைய பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில் அவரது 2024ம் ஆண்டுக்கான தேர்தல் தொடர்பான கணிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
2023ம் ஆண்டின் இறுதி மாதத்தில் நாம் உள்ளோம். இன்னும் 6 நாளில் 2023ம் ஆண்டு முடிந்து 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டுக்கான கணிப்புகளை ஜோதிடர்கள், ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தான் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரை சேர்ந்த கிரேக் ஹாமில்டன் முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தல்களில் வெற்றி பெறுவது யார்? என்பது பற்றி அவர் முக்கிய விஷயங்களை கணித்து கூறியுள்ளார்.
கிரேக் ஹாமில்டனின் முந்தைய பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன. இதற்கு முன்பு கொரோனா பரவல், டொனல்ட் ட்ரம்பின் அதிபர் பதவி, பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவு உள்ளிட்டவை அவர் கணித்தது போலவே நடந்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இவரது கணிப்புகள் அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும்.
அதாவது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோதிடர் நோஸ்ராடாமஸ் என்பவர் 16ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து மறைந்தாலும் கூட அவர் ஏராளமான கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். அந்த கணிப்புகளில் பல அப்படியே நடந்து வருகின்றன. இதனால் கிரேக் ஹாமில்டனை ‘நியூ நோஸ்ராடாமஸ்’ என பலரும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது கிரேக் ஹாமில்டன் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் தனது கணிப்புகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதில் அவர் அடுத்த ஆண்டு நம் நாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்த அவர் கூறியதாவது:
”இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி மீண்டும் நாட்டை வழிநடத்துவதில் உறுதியாக இருக்கிறார். அவர் இப்போதும் ஆட்சியில் இருக்கிறர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் மீண்டும் அவரே பிரதமராக தேர்வு செய்யப்படுவார். பிரதமர் மோடி இந்தியாவை நவீனமயமாக்கி வருவதையும், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை முன்னெடுத்து வருவதை நான் கண்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ”அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான செயல்கள் நடக்கும். ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும். மேலும் இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு கறுப்பின பெண் ஒருவர் உதவி செய்வார்” என தெரிவித்துள்ளார்.