பாரதீய ஜனதா கட்சியில் முகமது சமி: தொடரும் பேச்சுவார்த்தை
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான முகமது சமி எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிடப் போவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இது குறித்து சமியிடம், பாரதிய ஜனதாகட்சியின் உயரிய வட்டாரங்கள் கலந்துரையாடியுள்ளன.
எனினும் அவர் தற்போது லண்டனில் சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் இதுவரை தனது முடிவை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சிறந்த பந்துவீச்சாளர்
இந்நிலையில், முகமது சமி 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக செயற்பட்டு அதிக விக்கெட்களை வீழ்த்தி, அணியை இறுதிப் போட்டி வரை செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அதன் பின் அவருக்கு காலில் காயம் மற்றும் வலி ஏற்பட்டதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதன்உடி தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர், தற்போது லண்டனில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பாரதீய ஜனதா கட்சி, சமிக்கு கடந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வழங்கியது. அதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டியது. இதன் அடிப்படையிலேயே சமியை பாரதீய ஜனதா கடசி அனுகியுள்ளதாக கூறப்படுகிறது.