முகமது ஷமியின் சகோதரர் அசத்தல் பந்துவீச்சு.. ரஞ்சி கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகள்.. யார் இந்த கைஃப்
கான்பூர் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது சமி உலகக்கோப்பை போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி அண்மையில் சாதனை படைத்தார். சமிக்கு 33 வயதுக்கு மேல் ஆகும் நிலையில் அவருக்குப் பிறகு யார் அந்த இடத்தை பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் அவருடைய குடும்பத்திலேயே ஒரு வீரர் தற்போது வளர்ந்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முஹமது ஷமியின் கூடப்பிறந்த சகோதரர் பெயர் முஹம்மது கைஃப். 27 வயதான இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் தற்போது பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார்.
உத்திர பிரதேச அணியும் பெங்கால் அணியும் மோதிய ரஞ்சி கிரிக்கெட் ஆட்டத்தில் பந்து வீசிய முகமது கைஃப் உத்திரபிரதேசத்தின் பேட்டிங்கை சிதறடித்தார். 5.5 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உத்தர பிரதேச அணி 60 ரன்களில் சுருண்டது.