முகமது ஷமி டெஸ்ட் அணியில் நீக்கம்.. கமுக்கமாக இருக்கும் பிசிசிஐ.. இந்திய அணியில் நடந்த மாற்றம்
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி பெயர் இடம் பெறவில்லை. பொதுவாக முக்கிய வீரர்களை அணியில் தேர்வு செய்யவில்லை என்றால் அது குறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்கும். ஆனால், இந்த முறை விளக்கம் அளிக்கவில்லை.
முகமது ஷமிக்கு காலில் உள்காயம் இருப்பதாகவும், அதனால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அப்போது கூறப்பட்டது. இப்போதும் அவர் இன்னும் மீண்டு வரவில்லை என்றாலும் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சமீபத்தில் முகமது ஷமி தன்னை டி20 போட்டிகளில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள் என பேட்டி அளித்து இருந்தார்.
பிசிசிஐக்கு எதிராக அவர் பேசியதாக அப்போது பரபரப்பு எழுந்த நிலையில், தற்போது அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஷமி காயத்தால் நீக்கப்பட்டாரா? அல்லது பிசிசிஐ அவரை ஓரங்கட்டி வைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.