5 வருஷமா உருவாகும் மோகன்லால் படம்.. இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் போட்ட ட்யூனை கேளுங்க!

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மோகன்லால் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பரோஸ் திரைப்படத்திற்கு இசையமைக்க 12 வயதான சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது அவருக்கு 17 வயதாகி விட்டது. படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது இசை ரெக்கார்டிங் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.

ஒரே நேரத்தில் இரண்டு பியோனாக்களை வைத்துக் கொண்டு வாசித்து அசத்திய 12 வயது சிறுவனுக்கு தி வேர்ல்ட்ஸ் பெஸ் ஷோ மூலம் உலகளவில் புகழ் கிடைத்தது. ஏ.ஆர். ரஹ்மானின் மாணவர் என்கிற பெருமையுடன் மாஸ் காட்டிய அவர் நாடு திரும்பியதும் இசைப்புயலே பாராட்டு விழா நடத்தினார்.

உடனே புக் செய்த மோகன்லால்: 12 வயது சிறுவனின் அசாத்திய இசை ஆற்றலை பார்த்து அசந்து போன மோகன்லால் தான் முதன்முதலில் இயக்கத் தொடங்கிய பரோஸ் 3டி படத்துக்கு லிடியன் நாதஸ்வரம் தான் இசையமைப்பாளர் என 2019ம் ஆண்டு அறிவித்து விட்டார். அதற்கான பணிகளையும் லிடியன் நாதஸ்வரம் ஆரம்பித்தார்.

5 வருஷம் ஆகிடுச்சு: 2019ல் மோகன்லால் இயக்கத்தில் உருவாக தொடங்கிய அந்த படத்தின் சூட்டிங் முன்னதாகவே முடிந்து விட்டது. ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு இடையே இந்த 5 ஆண்டுகளில் 7 முதல் 8 படங்களில் நடித்து ரிலீஸ் செய்து விட்டார் மோகன்லால். சமீபத்தில், தொடங்கப்பட்ட மலைக்கோட்டை வாலிபன் படம் கடந்த வாரம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியானது. ஆனால், அந்த படம் பெரிதாக ஓடாமல் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மோகன்லால் நடிப்பில் வெளியான பல படங்கள் ஃபிளாப் ஆகி வருகின்றன. திரிஷ்யம் 2 மற்றும் நேரு என ஜீத்து ஜோசப் இயக்கிய படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் அவருக்கு வெற்றியை கொடுத்தன. ரஜினிகாந்த் உடன் மோகன்லால் கேமியோவாக நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *