Money Luck 2024: சுக்கிரன் உச்சம்.. யாருக்கு யோகம் தெரியுமா?
நவகிரகங்களில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக சித்திர பகவான் விளங்கி வருகிறார் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். இவர் தனது சொந்த ஆசியான துலாம் ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ஆசையான விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.
சுக்கிர பசுவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.
மகர ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். உங்கள் ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகம் என்பதால் இந்த இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இதுவரை நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகிறார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சிக்கிக் கிடந்த பணம் சுக்கிரனின் அருளால் உங்கள் கைத்தடி வரும். 2024 ஆம் ஆண்டு தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.
ரிஷப ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது.