Money Luck: ராகு புதன் பண யோகம்.. 3 ராசிகளுக்கு உறுதி
நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகுபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ராகு பகவானை கண்டால் மிகவும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். கல்வி, படிப்பு, அழகு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இவர் விளங்கி வருகிறார்.
சமீபத்தில் இடப்பெயர்ச்சி செய்த ராகு பகவான் மீனராசிகள் பயணம் செய்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு ராகு மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து பயணம் செய்ய உள்ளனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி
புதன் மற்றும் ராகு உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் இணையுள்ளனர். இதனால் வரக்கூடிய புத்தாண்டில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் உறவு மேம்படும். சில காலகட்டத்தில் நல்ல செய்திகள் தேடிவரும். நோய் பாதிப்புகள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
கும்ப ராசி
புதன் மற்றும் ராகு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இவர்களின் பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
ரிஷப ராசி
இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு பணவரவு கிடைக்கப் போகின்றது. ராகு மற்றும் புதன் உங்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகப்படுத்த போகின்றனர். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் உங்களுக்கு சாதகமாக அமையும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் அதிக வாய்ப்புகளை உண்டாக்கும்.