“இந்த” மீன்களை வீட்டில் வளர்த்தால் பணப்பிரச்சனை வரவே வராது…அது என்ன மீன்கள் தெரியுமா?
நம்மில் பலருக்கு வீட்டில் மீன்களை வளர்ப்பார்கள். ஆனால் உளவியல் ஆய்வுபடி, வீட்டில் மீன் வளர்ப்பதால், அவற்றை பார்க்கும் போது மனம் லேசாகி மன அழுத்தம் குறைவடையுமாம். மேலும் சிலர், வீட்டில் மீன்களை வளர்த்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்காகவும், செல்வம் கொழிக்க வேண்டும் என்பதற்காகவும் மீன்களை வளர்ப்பார்கள். அந்தவகையில், இப்பதிவில் வீட்டில் வளர்க்கக் கூடிய வாஸ்து மீன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
செல்வத்தை தரும் வாஸ்து மீன்கள்: பலரது வீடுகளில் மீன் வளர்ப்பு என்பது வாஸ்து முறையாக பார்க்கப்படுகிறது. இது சீன மொழியில் பெங்சூய் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வாஸ்து மீன்களாக பார்க்கப்படுபவை, அரோனா, பிளவர் ஹார்ன், கோல்டன் ஃபிஷ் மற்றும் கோய் என்பவை ஆகும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட அரோனா வகை மீன்களை வீட்டில் வளர்த்தால் வீட்டில் பண மழை கொட்டும் என்று நம்பப்படுகிறது. அதுபோல், வங்கியில் வேலை செய்பவர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என இது போன்ற வாஸ்து மீன்களை நீங்கள் வீட்டில் வளர்த்தால் உங்களுக்கு பணம் புழங்கும் என்று கூறப்படுகிறது.
கண் திருஷ்டி நீங்கும்: அதுபோல், இந்த வாஸ்து மீன்களை நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீது இருக்கும் கண் திரிஷ் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்துமதம் தவிர பிற மதத்திலும், கண் திரிஷ்டி என்பது மிகவும் சக்தி வாய்ந்த விடயமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த வாஸ்து மீன்களால் மட்டுமே
அதுமட்டுமின்றி, இந்த வாஸ்து மீன்கள் யாவும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல்களை கொண்டுவருவதோடு மட்டுமில்லாமல், அவை மனதிற்கு நல்ல எண்ணங்கள் உருவாக வழிச் செய்கிறது. ஆதலால் இந்த வாஸ்து மீன்களை உங்கள் வீட்டில் உடனே வளருங்கள் இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.