காலை உடைத்து கண்ணீருடன் வெளியேற வைத்த ஆஸியை.. காபாவில் 35 வருடம் கழித்து ஓடவிட்ட 24 வயது வீரர்.. மாஸ் பதிலடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த வெற்றியால் 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் 1 – 1 என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

ஜனவரி 25ஆம் தேதி பகலிரவு போட்டியாக துவங்கிய அப்போடியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் போராடி 311 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்வா டா சில்வா 79, காவெம் ஹோட்ஜ் 71 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 289/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

மாஸ் பதிலடி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 75, அலெக்ஸ் கேரி 65, கேப்டன் கமின்ஸ் 64* ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 22 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெக்கன்சி 41 ரன்கள் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், நேதன் லயன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இறுதியில் 216 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக 91* ரன்கள் எடுத்து போராடியும் எதிர்ப்புறம் வந்த வீரர்கள் சமர் ஜோசப் வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக சமர் ஜோசப் 7 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் 30 வருடங்கள் கழித்தும் காபா மைதானத்தில் 35 வருடங்கள் கழித்தும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2 சரித்திரம் படைத்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *