மொறு மொறு காரா பூந்தி: 15 நிமிஷத்துல வீட்டில் செய்யலாம்
காரா பூந்தி இப்படி செய்யுங்க, செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் கடலை மாவு
¼ மஞ்சள் பொடி
கால் ஸ்பூன் உப்பு
2 சிட்டிகை பெருங்காயத்தூள்
1 கரண்டி சூடான எண்ணெய்
பொறிக்கும் அளவு எண்ணெய்
கருவேப்பிலை 2 கொத்து
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சேர்க்கவும், கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, உப்பு, ஒரு கரண்டி எண்ணெய், தண்ணீர் சேர்த்து கிரளவும். சிறிய குழிகள் உள்ள கரண்டியை எடுக்கவும். பொறிக்கும் அளவு எண்ணெய் எடுத்து கொள்ளவும். எண்ணெய் சூடாக வேண்டும், அதிக குழிகள் உள்ள கரண்டி மேல் அந்த மாவை ஊற்றவும். பொறித்து எடுக்கவும், தொடந்து இதில் கருவேப்பிலை சேர்த்து பொறித்து எடுக்கவும். சுவையான காரா பூந்தி ரெடி.