மொறு மொறு ரிபன் பக்கோடா: இப்படி செய்யுங்க
தேவையான பொருட்கள்
ஒரு கப் பொட்டுக் கடலை
ஒரு கப் இட்லி மாவு
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்
கால் டீஸ்பூன் சீரகப் பொடி
அரை டீஸ்பூன் ஓமம்
பெருங்காயத்தூள்
ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய்
பொறிக்க தேவையான எண்ணெய்
செய்முறை: பொட்டுக் கடலையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இட்லி மாவு ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அதில் அரைத்த பொட்டுக் கடலை மாவை சேர்க்கவும். அதில் மிளகாய் பொடி, ஓமம், எண்ணெய் சேர்க்கவும். இதை நன்றாக மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள். தற்போது இடியாப்பம் புழியும் அச்சில், ரிபன் பக்கோட அச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மாவின் உருண்டையை வைத்து கொதிக்கும் எண்ணெய்யில் பிழிய வேண்டும். இரு பக்கமும் நன்றாக பொறிந்து வந்தால், சூப்பரான ரிபன் பக்கோடா ரெடி.