மொறு மொறு உப்பலடை : இந்த சுவையை எதுவும் அடிச்சுக்க முடியாது
ஒரு முறை இந்த மொறு மொறு உப்பலடையை வீட்டில் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
1 கப் புழுங்கல் அரிசி
¼ கப் துவரம் பருப்பு
¼ கப் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
8 வத்தல் மிளகாய்
பெருங்காயம் சேர்த்து தண்ணீர்
அரை கப் தேங்காய்
உப்பு தேவையான அளவு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பும், உளுந்தம் பருப்பை நன்றாக கழுவ வேண்டும். தொடந்து இதை 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதை மிக்ஸியில் சேர்த்து, வத்தல், உப்பு, தேங்காய் மற்றும் பெருங்காயம் கலந்த தண்ணீரில் அரைத்து எடுத்துகொள்ளவும். தொடர்ந்து இதை பொறித்தி எடுக்கவும்.