குளத்தில் குளிக்கச் சென்ற தாய், மகள் உயிரிழப்பு

திருவாடனை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தாய் மற்றும் 11 வயது மகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அழகமடை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் பேக்கரி வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது தொடர் விடுமுறையின் காரணமாக குடும்பத்தோடு சொந்த ஊரான அழகமடை கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் கோவிலுக்கு செல்வதற்காக ராஜாராம் மனைவி ராஜேஸ்வரி (40) மற்றும் மகள் ஹஞ்சிதா (11) இருவரும் அருகிலுள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர்.

அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது மகள் ஹஞ்சிதா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், அதனைக் கண்ட தாய் ராஜேஸ்வரி தனது மகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் நீரில் மூழ்கி மூச்சு திணறி இருவருமே பலியாகினர்.

தகவலின் பேரில் திருவாடானை தீயணைப்பு துறையினர் வந்துகண்மாயில் தேடி இருவரது உடலையும் மீட்டனர். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் கண்மாயில் மூழ்கி தாயும் மகளும் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *