5 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தாய்: பின்னர் நிகழ்ந்த சோகம்
இந்திய மாநிலம் கேரளாவில் 25 வயது பெண்ணொருவர், தனது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இது மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் மனைவி சரண்யாவுடன் (25) அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
கணவரின் மதுப்பழக்கத்தினால் மனமுடைந்த சரண்யா, தனது 5 வயது மகன் மிதுனுடன் ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு வந்த கொல்லம் – கன்னியாகுமரி ரயில் முன் அவர் தனது மகனுடன் பாய்ந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து தாய், மகனின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.