Mouni Roy : உன்னால் பாலிவுட் நடிகையாக முடியாது! நிராகரிக்கப்பட்ட அனுபவம் பகிர்ந்த மௌனி ராய்…
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக பயணித்த பல நடிகைகளில் ஒருவர் பாலிவுட் நடிகை மௌனி ராய்.
இந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘நாகினி’ தொடர் வெற்றிபெற்றதை அடுத்து அது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது.
அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கும் ‘ஷோடைம்’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதன் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட நடிகை மௌனி ராய் அவர் நிராகரிக்கப்பட்டதை பற்றியும் அவர் எப்படி கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க டைப்காஸ்ட் செய்யப்பட்டார் என்பதை பற்றியும் பேசி இருந்தார்.
நடிகை மௌனி ராய் பேசுகையில் “நான் டைப்காஸ்ட் செய்யப்பட்டேனா என யாராவாவது என்னிடம் கேட்டால் ‘ஆமாம்’ என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும். இருப்பினும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை தேர்ந்தெடுத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
திரை தொழில் என்பது நியாயமான ஒரு தொழிலாக இருக்கலாம் ஆனால் மிகவும் கடினமானது என்பதை நான் உண்மையாக நம்புகிறேன். கடின உழைப்பு மற்றும் சவால்கள் இல்லாமல் போராட்டம் இல்லாமல் இருக்காது. அதே போல வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை. வேலை செய்வது நிச்சயம் அதற்கான பலனை கொடுக்கும் என்பதை நான் முழுமனதாக நம்புகிறேன்’ என்றார் மௌனி ராய்.
‘நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் உண்மையான உழைப்பைகொடுக்கும் போது நிச்சயமாக ஒரு நாள் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். இது தான் என்னுடைய வாழ்க்கையின் தாரக மந்திரம். நான் யாரிடமாவது பேசினால், என் 100 சதவீத கவனமும் அவர்களிடம் மட்டுமே இருக்கும்’ என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் “பாலிவுட் நடிகையாகும் திறமை என்னிடம் இல்லை என நான் நிராகரிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கையில் நான் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் என்னை புறக்கணித்த போதும் திரைத்துறை மீது எந்த ஒரு கசப்பும் இல்லாமல் என்னால் பயணிக்க முடிந்தது” என்றார் மௌனி ராய்.