இறுதிக்கட்டத்தில் மிஸ்டர் மனைவி தொடர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.
வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என நிணைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும்.
இந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் டிஆர்பி குறைந்துள்ளதால் இத்தொடரை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இத்தொடரின், இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா, செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.