MS Dhoni : ராமர் கோவிலுக்கு போகலை ஆனா.. தோனி மனைவி செய்த செயல்.. எதிர்ப்பை காலி செய்த சாக்ஷி
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டும் அவர்கள் செல்லவில்லை. அதனால், பலர் தோனிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அந்த எதிர்ப்பை குறைத்து இருக்கிறது. அவர் ராமர் கோவிலில் நிறுவப்பட்ட சிலையின் புகைப்படம் ஒன்றை அதில் வெளியிட்டு இருந்தார். அதன் மூலம் பலரும் தோனி ராமர் கோவிலுக்கு சென்றதாக கூறி வருகின்றனர்.
சாக்ஷியின் அந்த இன்ஸ்டா ரீல்ஸை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பலரும், “இங்கே பாருங்கள். தோனியும், சாக்ஷியும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சென்று இருக்கிறார்கள். அது தெரியாமல் அவர்கள் செல்லவில்லை என பொய் செய்தியை பரப்ப வேண்டாம்” எனக் கூறி இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் செல்லவில்லை என்பது தான் உண்மை.
அது புரியாமல் பலரும் சாக்ஷியின் இன்ஸ்டா ரீல் குழப்பி இருக்கிறது. அந்த வகையில் சாக்ஷி ஒரு மாதிரியாக எதிர்ப்பை சமாளித்து இருக்கிறார். தோனியைப் போலவே ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அழைப்பு கிடைத்தும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
விராட் கோலி அயோத்தி வரை சென்றதாகவும், ஆனால், அவரது மனைவிக்கு திடீரென அவசரநிலை ஏற்பட்டதால் அவர் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்பு விராட் கோலி விநாயக சதுர்த்தி விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை எடுத்து, “இங்கே பாருங்கள். விராட் கோலி ராமர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். உண்மை தெரியாமல் அவர் செல்லவில்லை என கூறாதீர்கள்” என சிலர் முட்டுக் கொடுத்து வருகிறார்கள். விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணமாக செல்லாத நிலையில், தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீது பார்வை திரும்பி உள்ளது. சமூக ஊடகங்களில் இவர்கள் இருவரையும் குறி வைத்து பல விமர்சன பதிவுகள் பரவி வருகின்றன.