முத்ரா கடன் திட்டம்.. லோன் யாருக்கெல்லாம் வேணும்? மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா இருக்கே

சென்னை: கோடானுகோடி மக்கள் பலன்களை பெற்று வரும் மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா?

இதன் முக்கியத்துவங்கள் என்னென்ன? பலன்கள் என்னென்ன தெரியுமா?

கடந்த 2015, ஏப்ரல் 8ம் தேதி இந்த திட்டத்தை துவக்கி வைத்திருந்தார் பிரதமர் மோடி.. யாருக்கெல்லாம் தொழில் தொடங்க விருப்பமோ அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்தவகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம்..

கடன் உதவி: மத்திய அரசு இந்த கடன் உதவியை பொதுமக்களுக்கு வழங்க காரணம், வேலைவாய்ப்பை இந்தியாவிலிருந்து நீக்குவதுதான்.. அதுமட்டுமல்ல, சாமான்ய மக்களும் தொழில்முனைவோராக உயரலாம்.. அத்துடன், சிறு வணிகர்களும் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, தங்கள் தொழிலையும் விரிவுபடுத்தி கொள்ளலாம்.

மொத்தம் 3 வகைகளில், இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது… இந்த 3 வகைகளிலுமே வேறுவேறு கடன் வசதிகள் இருக்கின்றன.. குறிப்பாக, “சிஷு” (Shishu) என்ற திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையில் கடன் தரப்படுகிறது. “கிஷோர்” என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், “தருண்” என்ற திட்டத்தின்மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.

உத்தரவாதம்: யாரிடம் கடன் கேட்டாலும் அதற்கான அத்தாட்சியும், உத்தரவாதமும் கேட்கப்படும். ஆனால், இந்த திட்டத்தில் அப்படி எதுவுமே இல்லை.. பொதுவான தகவல்களை, அது தொடர்பான ஆவணங்களுடன் இணைத்து தந்தால் போதும்.. குறிப்பாக, திட்ட அறிக்கைகள், எதிர்கால வருமான கணிப்புகள் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் கேட்கலாம்

வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், முத்ரா கடன்களை வழங்குகின்றன.

விண்ணப்பங்கள்: இந்த வங்கிகளில், முத்ரா கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். அதை நிரப்பி, அத்துடன் அடையாள சான்று, இருப்பிட சான்று, போட்டோ, இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை சேர்த்து தர வேண்டும்.. வங்கி உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, ஒரு மாதத்திற்குள் கடன் அனுமதிக்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பத்தை விரும்புவோருக்கு, முத்ரா லோன் mudra.org.in வெப்சைட்டில் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டு உருவாக்குவது எளிதாக உள்நுழைவு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உதவுகிறது.

யாருக்கெல்லாம் கடன்: விவசாயம், உள்ளிட்ட வேறு எந்த தொழிலுக்கும் இந்த முத்ரா கடன் பெற முடியாது.. புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *