முகேஷ் அம்பானியிடம் இல்லாத காரை வாங்கி அசத்திய ஹைதராபாத் பெண்.. விலை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்..!!
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கெளதம் அதானி மற்றும் எம்எஸ் தோனி உள்ளிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பல கார் கலெக்ஷன் வைத்துள்ளனர்.
அவர்கள் அடிக்கடி தங்கள் சொகுசு கார்களில் பயணம் செய்யும் வீடியோ, போட்டோ இணையத்தில் வைரலாவது வழக்கமான ஓன்று. ஆனால் பெரும் பணக்காரர்கள், பிரபலங்களிடம் எலக்ட்ரிக் கார்களை அதிகம் விரும்பி வாங்குவது இல்லை, அதிகப்படியாக அம்பானி, மற்றும் சிலர் டெஸ்லா கார்களை வைத்துள்ளனர். ஆனால் ஹைதராபாத்-ஐ சேர்ந்த ஒருவர் இந்தியாவில் இதுவரை யாரும் வாங்காத காரை வாங்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் இந்தியாவில் ரூ.2.55 கோடி (எக்ஸ்-ஷோரூம்) மதிப்புள்ள முதல் லோட்டஸ் எலெட்ரே எஸ்யூவியை வாங்கியது யார் தெரியுமா? ஹைதராபாத்தில் வசிக்கும் ஹர்ஷிகா ராவ். இந்தியாவில் கடந்த ஆண்டு , பிரிட்டிஷ் பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான லோட்டஸ் குழுமம் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் லைஃப்ஸ்டைல் வாகனங்கள் வணிகத்தை கிக்ஸ்டார்ட் செய்தது. பிரபல சொகுசு மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான லோட்டஸ் எலெட்ரே இ-எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் ஹர்ஷிகா ராவ் நாட்டிலேயே விலை அதிக விலை மதிப்புள்ள எலக்ட்ரிக் எஸ்யூவியின் முதல் உரிமையாளர் என்ற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
லோட்டஸ் நிறுவனம் எலெட்ரே, எலெட்ரே எஸ் மற்றும் எலெட்ரே ஆர் என்ற மூன்று மாடல்களில் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹர்ஷிகா ராவ் டார்க் சிவப்பு நிறத்தில் சொகுசு காரை வாங்கியுள்ளார். கார் கார்சி இந்தியா என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் இதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. அதில் உரிமையாளரையும் குறிப்பிட்டுள்ளது, Eletre SUV இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விலையுயர்ந்த மின்சார SUV என்று கூறப்படுகிறது.
லோட்டஸ் எலெட்ரேயின் அடிப்படை மாடல் – ஸ்டாண்டர்டு தில்லியில் 2.55 கோடி ரூபாய் விலையில் தொடங்குகிறது. லோட்டஸ் எலெட்ரே – ஆர் இன் டாப் மாடல்டெல்லியில் 2.99 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோன்ற வடிவமைப்பு ஹெட்லைட் அமைப்பைப் பகிர்ந்துள்ளதால், காரின் முன்பக்கம் ஃபெராரியால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. Eletre மற்றும் Eletre S ஆகியவை 603hp டூயல்-மோட்டார் அமைப்பைக் கொண்டுள்ளன, அதிகபட்சமாக 600கிமீ தூரம் வரை செல்லும். Eletre R ஆனது 905hp, டூயல்-மோட்டார் அமைப்புடன் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் அதிகபட்சமாக 490km வரம்புடன் வருகிறது. மூன்று வகைகளும் 112kWh பேட்டரியை கொண்டுள்ளன.