இவங்க வீட்டுக்கு முன்னாடி முகேஷ் அம்பானி அன்டிலியா வீடு ஒரு குடிசை மாதிரி..!

ங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிது லக்ஷ்மி விலாஸ் அரண்மனை. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை குஜராத்தில் உள்ளது, பரோடாவின் கெய்க்வாடுகளுக்கு இந்த அரண்மனை சொந்தமாகும்.
இது உலகிலேயே மிகப் பெரிய தனியார் குடியிருப்பாகும். குறிப்பிடத்தக்க சரித்திர சிறப்பு வாய்ந்த இந்த அரண்மனை பரோடாவை ஒருகாலத்தில் ஆண்டு வந்த கெய்க்வாடுகளுக்குச் சொந்தமானது. உள்ளூர் மக்கள் இந்த அரண்மனை மீது இப்போதும் மிகுந்த மரியாதையை வைத்துள்ளனர்.
தங்களது பாரம்பரியச் சின்னமாக லக்ஷ்மி விலாஸ் அரண்மனையை அவர்கள் கருதுகின்றனர். தற்போது ஹெச்ஆர்ஹெச் சமர்ஜித்சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ராதிகாராஜே கெய்க்வாட் பொறுப்பில் இந்த அரண்மனை உள்ளது. சுமார் 3,04,92,000 சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை 8,28,821 சதுர அடியில் அமைந்துள்ளது. லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் 170 அறைகள், ஒரு கோல்ப் மைதானம் உள்ளிட்டவை அடங்கும்.
முகேஷ் அம்பானியின் உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றான ரூ.15,000 கோடி மதிப்புள்ள 48,780 சதுர அடியில் அன்டிலியா அமைந்துள்ளது. மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் இந்த அரண்மனையை 1890 சதுர அடியில் 1,80,000 பிரிட்டன் பவுண்ட் செலவில் அமைத்தார். குஜராத்தின் வான்கனேர் பகுதியில் 1978 ஜூலை 19 ஆம் தேதியன்று ராதிகாராஜே கெய்க்வாட் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் எம்கே ரஞ்சித்சிங் ஜாலா தனது அரசு பட்டத்தைத் துறந்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனார். ராதிகராஜே கெய்க்வாட், வாசிப்பு மற்றும் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2002 இல் மகாராஜ் சமர்ஜித் சிங் கெய்க்வாட்டை திருமணம் செய்வதற்கு முன்பு, அவர் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றினார். 2012 இல், லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில் பரோடா கிரீடம் சமர்ஜித் சிங் கெய்க்வாட்க்கு அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை சமர்ஜித் சிங் வசம் ஆனது. தற்போது அவரும் அவரது மனைவி ராதிகாராஜே கெய்க்வாட்டும் இதில் வசித்து வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *