Multibagger: ஒரே வருடத்தில் 370% லாபம் கொடுத்த பங்கு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர் உற்பத்தி செய்யும் நிறுவனமான செர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் (Servotech Power Systems) நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) வர்த்தகத்தில் அதிகப்படியான முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றது.
செர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் அப்பர் சர்கியூட்டில் லாக் ஆகி ரூ.97.80 என்ற விலையில் வர்த்தகமானது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், நிறுவனம் ரூ.102 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றது தான்.
இந்த ஆர்டரின்படி, செர்வோடெக் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மஹாரத்னா நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம் (HPCL) மற்றும் பிற எலக்ட்ரிக் வாகன சார்ஜர் உற்பத்தியாளரியிடம் இருந்து 102 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றது.
இந்த ஆர்டர் மூலம் 1,500 DC ஃபாஸ்ட் ஈவி சார்ஜர்களை உற்பத்தி செய்து வழங்க உள்ளது செர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம். இந்த சார்ஜர்கள் 60 kW மற்றும் 120 kW என்ற இரண்டு வகைகளில் தயாரித்து அளிக்க உள்ளது.
ஆர்டர் விவரங்களின்படி, செர்வோடெக் நிறுவனம் HPCL-க்கு நாடு முழுவதும் அதன் ஈவி சார்ஜிங் ஸ்டேஷனுக்கு DC ஈவி சார்ஜர்களை உற்பத்தி செய்து வழங்கும். முதலில், மாநில உரிமை பெற்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த சார்ஜர்களை நிறுவும். மீதமுள்ள சார்ஜர்களை ஈவி சார்ஜர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும்.
செர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம் ரூ.2,080 கோடி சந்தை மூலதனம் கொண்ட சிறிய நிறுவனம் ஆகும். இது எலக்ட்ரிக் உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்கள் துறையில் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 20% உயர்ந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட 30% உயர்ந்துள்ளன. கடந்த ஒரு ஆண்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 371% க்கும் அதிகமான லாபத்தை வழங்கியுள்ளன. மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5,000% உயர்ந்துள்ளது.