தைப்பூசம் அன்று முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன்?- சுவாரஸ்யமான கதை!
ஒரு சமயம் அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன். அவன் மிகப்பெரிய பலசாலி எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான்.
அப்போது அவனுக்குள் நம்மைவிட மிகுந்த பலசாலி யாரும் இல்லை என்ற கர்வம் உண்டானது. அப்படி வரும் வழியில் முருகப்பெருமானின் திருவிளையாடலால் பாதை தெரியாமல் திகைத்து தடுமாறினான்.
அப்பொழுது முருகப்பெருமான் மிக அழகிய சிறுவனின் தோற்றத்தில் வந்து இடும்பனுக்கு வழிகாட்டினார். திருமாவினன்குடி அருகே வந்தபோது சிறுவனாக இருந்த முருகப்பெருமான் இடும்பா இங்கு நீ சற்று ஓய்வு எடுத்து விட்டு செல் என்றார் . இடும்பனும் அங்கு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று காவடி போல் சுமந்து வந்த மலைகளை கீழே இறக்கி வைத்தான். ஓய்வு எடுத்த பிறகு அந்த காவடியை தூக்கி அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை .என்ன காரணம் என்று பார்க்கையில் சிவகிரியின் உச்சியில் ஒரு அழகிய சிறுவன் கோவனத்துடன் கையில் ஒரு கம்பை ஒன்றை படி நிற்பதை கண்டான்.
உடனே கோபம் கொண்ட இடும்பன் சிறுவனை பார்த்து மலையில் இருந்து இறங்கு எனக் கூற அந்த சிறுவனோ இந்த மலை எனக்கே சொந்தம் என்றான்.
அப்போது அகத்தியரும் இடும்பனின் மனைவியும் முருகப்பெருமானிடம் வந்து இடும்பனுக்கு ஆசி கூறுமாறு வேண்டினர்.
இதை அடுத்து முருகப்பெருமான் இடும்பனை தன்னுடைய காவல் தெய்வமாக நியமித்தார். இடும்பன் இருமலைகளை தூக்கி வந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் வழக்கம் வந்தது.தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால்காவடி , பழ காவடி, புஷ்ப காவடி, சந்தன காவடி, சர்ப்பகாவடி பலவிதமான காவடிகளை சுமந்தபடி முருக பக்தர்கள் முருகனை தரிசிக்க செல்கிறார்கள். இவ்வாறு காவடி எடுக்கும் பக்தர்களுக்கு இடும்பனுக்கு அருள் செய்தது போல முருகப்பெருமான் அருள் செய்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.