Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் – யார் இந்த முஷீர்கான்?
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தொடர் மீது பி.சி.சி.ஐ.
நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை:
ஜாம்பவான் வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி இன்னும் சில காலம் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால், அவர்களைப் போன்ற வீரர்களை உருவெடுக்க இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கான பணிகளையும் பி.சி.சி.ஐ. தொடங்கியுள்ளது. அதற்கான ஒரு தேடல் தொடக்கமாகவே இந்த 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடர் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த தொடர் தொடங்கியது முதல் சிலரது செயல்பாடுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் முஷீர்கான். 18 வயதே ஆன இவர் சிக்ஸர் அடிப்பதில் மிகச்சிறந்தவர் என்பதால் இவர் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே கணிக்கப்பட்டது.
யார் இந்த முஷீர்கான்?
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல, நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
தொடக்க வீரர் ஆதர்ஷ் கான் 17 ரன்களில் அவுட்டாகவும் களமிறங்கிய முஷீர்கான் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். சிறப்பாக ஆடிய அர்ஷின் குல்கர்னி 32 ரன்களில் அவுட்டாக, கேப்டன் உதய் சாஹரன் – முஷீர்கான் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அபாரமாக ஆடி அணியை நல்ல இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். சிறப்பாக ஆடிய உதய் – முஷீர்கான் அரைசதம் கடந்து அபாரமாக ஆடினார். ஏதுவனா பந்தகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசிய முஷீர்கான் சதம் அடித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய உதய் 84 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.