பிரதமரை புகழ்ந்து தள்ளிய இசைஞானி இளையராஜா..!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். அப்போது ராம பஜனை பாடல்கள் பாடப்பட்டன.ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டு நிலையில் ஏராளமானோர் இதனை கண்டு களித்தனர் .

இந்நிலையில் சென்னை நாரதகான சபாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையராஜா மேடையில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் இளையராஜா பேசியுள்ளார்.ராமர் கோயில் பற்றி பேசும் போதே கண்ணீர் வருகிறது. அயோத்தியில் இன்று நான் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என இளையராஜா தெரிவித்துள்ளார்

ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். முன்பெல்லாம் மன்னர்கள் தான் கோயில்களை கட்டினார்கள்.ஆனால் தற்போது பிரதமர் மோடி கோயிலை கட்டியுள்ளார். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம், யாரால் முடியும் என கூறினார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். யார் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார்கள் என எண்ணிப்பாருங்கள் என இளையராஜா கண் கலங்கி பேசினார். மேலும், அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இன்று இங்கு இருப்பதற்காக வருத்தப்படுகிறேன். ஆனாலும், உங்களுடன் இருப்பதில் ஆறுதல் அடைகிறேன். இது இந்தியா முழுவதற்குமான கோயில் என இளையராஜா பேசினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *