பல்வேறு Tab-களில் பிரவுஸ் செய்வதற்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கீபோர்ட் ஷார்ட்கட்கள்!
இன்டர்நெட்டில் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை விண்டோஸ் அல்லது மேக் பயன்படுத்தி தேடும் பொழுது நம்மில் பெரும்பாலானவர்கள் பல்வேறு விதமான Tab-களை பயன்படுத்தி பிரவுஸ் செய்வது வழக்கம். ஆனால் மவுஸ் பயன்படுத்தி பல்வேறு டேப்களுக்கு இடையே நகர்வது என்பது சற்று நேரத்தை எடுத்துக் கொள்ள கூடிய செயலாகவும், அதே நேரத்தில் நம்மை எரிச்சல் அடைய செய்வதாகவும் இருக்கிறது.
இப்படிப்பட்ட சமயத்தில் தான் உங்களுக்கு கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. அந்த வகையில் பிரவுசர் டேப்களை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு புதிய டேபை திறப்பதற்கு…
நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு புதிய டேபை திறப்பதற்கு மவுசை தான் பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு நீங்கள் Ctrl + T ஷார்ட் கட்டையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வது ஆட்டோமேட்டிக்காக அட்ரஸ் பாருக்கு உங்களை கொண்டு செல்கிறது. அங்கு உங்களுக்கு பிடித்த சர்ச் எஞ்சினில் தேவையான விஷயங்களை நீங்கள் உடனடியாக தேடிப் பார்க்கலாம்.
கடைசியாக க்ளோஸ் செய்த டேபை மீண்டும் ஓபன் செய்ய…
வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக ஒரு டேபை மூடி விட்டீர்களா? கவலைப்படாதீர்கள். மவுசை டாப் பாருக்கு நகர்த்தி ரைட் கிளிக் செய்யுங்கள். அங்கு கடைசியாக நீங்கள் மூடிய டேபை மீண்டும் திறப்பதற்கான ஆப்ஷனை பெறுவீர்கள். இதற்கு பதிலாக ‘Ctrl+ Shift + T’ என்ற கீபோர்டு ஷார்ட்கட்டையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
ஒரு புதிய விண்டோவை ஓபன் செய்ய…
ஒரு புதிய பிரவுசர் விண்டோவை திறப்பதற்கு நீங்கள் ‘Ctrl + N’ என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்துங்கள். அதேபோல ஒரு புதிய டேபை திறக்கும் பொழுது டைப் செய்வதற்கான கர்சர் ஆட்டோமேட்டிக்காக அட்ரஸ் பாருக்கு சென்று விடும். அங்கு உங்களுக்கு விருப்பப்பட்ட விஷயங்களை நீங்கள் தேடலாம்.
ஒரு டேபில் இருந்து மற்றொரு டேபிற்கு மாற…
ஒருவேளை நீங்கள் பல்வேறு டேபுகளை ஒரே நேரத்தில் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்றால் ஒரு டேபில் இருந்து மற்றொரு டேபுக்கு செல்வதற்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் மவுஸ் மூலமாக டேபை கிளிக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் ‘Ctrl + Tab’ என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தி அடுத்த டேபிற்கு செல்லலாம் அல்லது ‘Ctrl + Shift + Tab’ என்ற ஷார்ட்கட் மூலமாக முந்தைய டேபிற்கு செல்லலாம்.
incognito டேபிற்கு செல்ல…
பிரவுசர் ஹிஸ்டரியில் பதிவு ஆகாத வகையில் ஒரு விஷயத்தை ஆன்லைனில் தேட விரும்புகிறீர்களா? Ctrl + Shift + N என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தி நீங்கள் Google Chrome, Microsoft Edge அல்லது Brave இல் உடனடியாக திறக்கலாம். ஒருவேளை நீங்கள் Firefox, பயன்படுத்தினால் அதற்கான ஷார்ட் கட் ‘Ctrl + Shift + P’.