Mutton Sukka: ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க! சீக்கிரம் காலியாகிடுமாம்
அட்டகாசமான சுவையில் வழக்கத்தை விட சற்று மாற்றமாக மட்டன் சுக்கா செய்வது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
அசைவப் பிரியர்களின் அதிகமான தெரிவு மட்டன் ஆகும். மட்டனில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் சுக்கா என்றால் தனி ருசி தான்.
தேவையான பொருட்கள்
மட்டனை வேக வைப்பதற்கு..
மட்டன் – 3/4 கிலோ
தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 3/4 டம்ளர்
சுக்காவிற்கு தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
அன்னாசிப்பூ – 2
பிரியாணி இலை – 2
வரமிளகாய் – 2
பூண்டு – 15 பல்
சோம்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்த பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதனுள் மட்டனை போட்டு தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வேக விட்டு இறக்கவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் அதனுடன் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.
மிக்ஸி ஜாரில் 15 பூண்டு பற்கள் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து, அதையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கி, தொடர்ந்து பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுள் குக்கரில் வேக வைத்த மட்டனையும் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
கிரேவி பதத்திற்கு வந்ததவும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா தயார்.