என் கண்ணு உங்க மேல தாங்க போகுது… ரஜினி சொன்னது ராக்கிங் மாதிரி இருந்தது.. பெப்சி உமா சொன்ன ஷாக் தகவல்..!
Rajinikanth: தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளினிக்கு இத்தனை பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் என்றால் அது கண்டிப்பாக பெப்சி உமாவுக்கு தான். அப்படி இருக்க அவர் ரஜினிகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பையே வேண்டாம் என்றாராம். இன்னும் சில விஷயங்களும் நடந்து இருப்பதாக தற்போது வீடியோ லீக் ஆகி இருக்கிறது.
15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெப்சி உமா. அவரின் நிகழ்ச்சியில் ஒரு முறையாவது பேசி விட வேண்டும் என விரும்பிய ரசிகர்கள் ஏராளம். அப்படி இருக்கும் போது, அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகளும் வந்ததாம்.
ரஜினியில் தொடங்கி ஷாருக்கான் வரை அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வழங்கியும் உடனே மறுத்துவிட்டாராம். இந்த தகவல் ஏற்கனவே மீடியாக்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்து இருக்கிறார்.
அடுத்து ரஜினியின் ஒரு படத்துக்கு தேர்வானவருக்கு ரஜினியே கால் செய்து நடிக்க விருப்பமா எனக் கேட்க வேண்டாம் சார். நான் தொகுப்பாளினியாகவே இருந்து விடுகிறேன். அதில் கிடைக்கும் பிரபலமே போதும். நடிகையாக பிரபலம் கிடைக்கும். ஆனால் அந்த கஷ்டத்தை என்னால் அனுபவிக்க முடியாது என்றாராம்.
அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த், உமாவை பார்த்து எனக்கு உங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலுமே கண்ணு அங்க போகாம உங்க பக்கமே போகிறது என்று சொன்னாராம். அது ராக்கிங் மாதிரி இருந்தது. இருந்தாலும் இப்போ சொல்லாம எப்போ சொல்றது என பெப்சி உமா சமீபத்தில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரம்பா அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் தன்னை தொட்டு பயமுறுத்தியதாக கூறியதை அடுத்து பெப்சி உமாவை ராக்கிங் செய்து இருக்கார் என்ற தகவலில் இந்த வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.