மனைவியே எனக்கு கண் கண்ட தெய்வம்.. பிரேமலதா குறித்து விஜயகாந்த் சொன்ன காதல் வார்த்தை..!

சினிமாவில் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தின் மீதும் அதிக பாசம் வைத்து இருந்தவர். பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட பிரேமலதா குறித்து அவர் பேட்டியில் சொல்லி இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன லவ்வு இது எனவும் ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

1990ம் ஆண்டு இவருக்கும் பிரேமலதாவுக்கும் திருமணம் ஆனது. மதுரையில் கோலாகலமாக நடந்த அந்த விழாவில் கலைஞர் தான் தாலி எடுத்து கொடுத்து இருந்தார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

விஜயகாந்த் உடல்நிலை நலிவடைந்ததில் இருந்து அவரின் தூணாகி போனார் பிரேமலதா. சவரம் செய்து விடுவதில் இருந்து அவருடனே சமீபத்திய வருடங்களில் வலம் வந்தார். அதிலும் விஜயகாந்த் இறந்ததாக சமீபத்தில் ரிலீஸான தகவலுக்கு உடனே மறுத்து கண்டனமும் தெரிவித்தார். அப்படி இருவருக்குமான காதலை ரசிகர்கள் பார்த்து இருக்கின்றனர்.

ஆனால் விஜயகாந்த் மனைவியை எப்படி நினைத்தார் என்பதற்கு அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், எனக்கு மனைவியே கண்கண்ட தெய்வம். நான் கஷ்டப்படும் போது எனக்கு பல நேரங்களில் உற்ற துணையாக இருந்தார். அவங்க பாத்து கட்டுனது தான் கல்யாண மண்டபம்.

நான் அரசியலுக்கு வரும் போது சொன்னேன். நம்ம கல்யாண மண்டபம், கல்லூரி எல்லாம் பாதிக்கப்படும் என்று. அப்போ அவங்க பரவாயில்லைங்க பாத்துக்கலாம். அவங்க ஏற்கனவே கிராமத்தில் இருந்ததால தைரியமாக இருந்தார். அவங்க மண்டபத்தை இடித்த போது நிறைய நஷ்டம் வந்தது. ஆனா அப்போ கூட அவங்க துணை இருந்ததால் தான் தைரியமாக தாண்டி வந்தேன்.

என்னுடைய மனைவி என்னோட எல்லா சுக, துக்கங்களிலும் கூடவே இருப்பார் எனச் சொல்லி இருப்பார். அன்று அந்த வீடியோவில் சொன்னது போல கடைசி நொடி வரை தன் கணவருக்காகவே துணை நின்று இருக்கிறார். கண்ணீர் மல்க இதோ அவரின் இறுதிஊர்வலத்திலும் போய் விடை கொடுக்க போகிறார். காதல் அழகு தான்ல!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *