ஜேர்மனியில் மாயமான புலம்பெயர்ந்த பெண் சடலமாக கண்டெடுப்பு: கணவர் கைது
ஜேர்மனியில், கடந்த மாதம் மாயமான புலம்பெயர்ந்தோரான பெண்ணொருவர், உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாயமான பெண்ணின் உயிரற்ற உடல் மீட்பு
கடந்த மாதம், அதாவது, டிசம்பர் மாதம், 21ஆம் திகதி, ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில், 35 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போனார்.
இந்நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று முன்தினம், அதாவது செவ்வாய்க்கிழமை, பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட அவரது உடல் நெதர்லாந்து எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
கணவர் கைது
அந்தப் பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள். அந்த 42 வயது நபர், ஆப்கன் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார். உயிரிழந்த பெண்ணும் ஆப்கன் நாட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்த நிலையில், அவரடு மொபைல் டேட்டாவை வைத்து அவரது உடலை பொலிசார் தற்போது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.