அமெரிக்க கடற்படையினருடன் மாயமான உலங்கு வானூர்தி
அமெரிக்க கடற்படையினரை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு அருகிலுள்ள தளத்திலிருந்து கலிபோர்னியா நோக்கிச் சென்ற உலங்கு வானூர்தியே காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 1 மணியளவில் வானூர்தி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த நேரத்தில் அது தரையிறங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேடும் பணி
குறித்த உலங்கு வானூர்தியில் ஐந்து கடற்படையினர் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
CH-53E சூப்பர் ஸ்டாலியன் ரக உலங்கு வானூர்தியே காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தகவலறிந்த மீட்பு குழுவினர் உலங்கு வானூர்தியை தேடும் பணியை தொடங்கி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.