புராண கதை: எண்ணம் நமதாக இருக்கலாம்; சித்தம் இறைவனுடையது!

டவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரிடத்தும் வேறுபடும். சிலருக்கு பூஜை நியதிகளில் ஆர்வம், சிலருக்கு ஆலயங்கள் செல்வதில் ஈடுபாடு, சிலருக்கோ கையெடுத்து கும்பிட்டாலே கடவுளுக்கு போதும் என்ற எண்ணம்.

இவர்கள் அனைவருக்கும் கடவுள் பொதுவானவரே. சரி ஒரு பக்தனின் நோக்கம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

கீதோபதேசம் முடிந்ததும் அர்ஜுனன், “கிருஷ்ணா உனது மேலான அறிவுரை உபதேசங்களை எல்லாம் கேட்டேன். ஆனால், இத்தருணத்தில் நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; அப்படியே செய்கிறேன்” என்று முடிவை பகவானிடமே விட்டு விட்டான்.

மகாபாரதத்தில் யுத்தம் தொடர்ந்தபோது, ‘ஜயத்ரதனை சூர்ய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன்’ என்று சபதம் செய்தான் அர்ஜுனன். இதை அறிந்த ஜயத்ரதன் அன்று காலையிலிருந்து மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள் அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.

ஜயத்ரதன் இருக்கும் இடம் தெரியாததால் அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவே முடியவில்லை. மாலை நேரம் நெருங்கிவிட்டது. அர்ஜுனன் என்ன செய்வது என்று அறியாமல், “என்ன கிருஷ்ணா, சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?” என்று கேட்டான்.

ஆபத்பாந்தவனான கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் மகிழ்ந்தான். “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் கதி அவ்வளவுதான். தீக்குளித்து விடுவான்’ என்ற எண்ணத்தில் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.

உடனே கிருஷ்ணர், “அர்ஜுனா… அதோ ஜயத்ரதன். ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் போய் விழும்படி தள்ளு’ என்றார்.

ஜயத்ரதனுடைய தந்தைதான் விருத்தட்சரன். அவரது கடுமையான தவத்துக்குப் பரிசாக அவரது வாரிசாக ஜனித்தவனே ஜயத்ரதன். அந்த ப்பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்கிரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்’ என்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *