மன்னனைப் போல வாழும் நெப்போலியன்.. அவர் செஞ்ச அந்த உதவி.. நெகிழ்ச்சியாய் பேசிய விதார்த்

நடிகர் நெப்போலியன் தனக்கு செய்த உதவியை என்றைக்கும் மறக்க மாட்டேன் என்று நடிகர் விதார்த் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகர் விதார்த். இந்த படத்திற்கு பின்னர் அவர் அஜித்தின் வீரம், முப்பரிமாணம், காற்றின் மொழி, இறுகப் பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மைனா படத்திற்கு முன்பு மின்னலே, மௌனம் பேசியதே, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் விதார்த் இடம் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டிலிருந்து இவர் சினிமா துறையில் இருந்து வந்தாலும், பெரிய அளவில் ஹிட் படங்கள் ஏதும் அவர் கொடுக்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த அன்பறிவு படத்தில் நெப்போலியன் உடன் விதார்த் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் நெப்போலியன், அதில் பங்கேற்க நடிகர் விதார்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மிக நெருக்கமானவர்கள் பங்கேற்ற அமெரிக்காவில் நடந்த நெப்போலியன் பிறந்தநாள் விழாவில் குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நெப்போலியன் குறித்து விதார்த் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எனது மகனின் ஸ்கூல் பீஸை முழுமையாக கட்டியது நெப்போலியன் தான். நான் பல படங்களில் நடித்துள்ளேன். அந்த வகையில் எனக்கு பெரிய சம்பளமோ, சேமிப்பு கிடையாது. அந்த சூழலில் எனக்கு உதவி செய்த நெப்போலியனை என்றைக்கும் மறக்க மாட்டேன்.

அன்பறிவு படத்தில் நான் நெப்போலியன் உடன் நடித்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. எனக்கு உதவியது போன்று, நெப்போலியன் ஏராளமானோருக்கு உதவி செய்துள்ளார். அமெரிக்காவில் அவர் மன்னரைப் போன்று வாழ்ந்து வருகிறார். அதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *