Nayanthara – என்னடா இது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு வந்த சோதனை.. அன்னபூரணி படத்தின் மீது புகார்
சென்னை: ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் நயன்தாராவை வைத்து அன்னபூரணி படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் கடந்த மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்த அன்னபூரணி நயன்தாராவுக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் ஏற்பட்ட காதல் பாதியிலேயே முடிந்தது. இதனையடுத்து பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு அவர் மாறியதாகவும் கூறப்பட்டது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை நயன்தாரா – பிரபுதேவா காதலும் பாதியில் முடிவடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவர் சிறிது காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். முதல் போல் இல்லாமல் இந்த முறை ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த அவர் அறம் படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பிறகு இரண்டு பேரும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டாலே சினிமாவிலிருந்து நடிகைகள் பொதுவாக ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் நயன்தாரா திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி என்ட்ரி: அந்தவகையில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார் நயன். அந்தப் படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வட மாநிலங்களில் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக நயனின் நடிப்பும், அவர் சண்டை போட்ட விதமும் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னபூரணி மீது வழக்கு: ஜவான் படத்துக்கு பிறகு ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குநராக அறிமுகமான அன்னபூரணி படத்தில் நடித்தார் நயன். இது அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.