அன்னபூரணி படத்தில் நயன்தாரா சொன்ன ஸ்வீட் ரெசிபி: திருச்சி ஸ்பெஷல்

திருச்சியின் ஸ்பெஷல் ஸ்வீட்டாக இந்த அக்காரவடிசல் கருதப்படுகிறது. மேலும் இது பிரசாத வகையை சேர்ந்ததால் இது கூடுதல் ஸ்பெஷல் ரெசிபியாகும்.
தேவையான பொருட்கள்
1 கப் அரிசி
½ கப் பாசிப் பருப்பு
4.5 கப் பால்
1.5 கப் தண்ணீர்
1 கப் வெல்லம்
½ கப் சர்க்கரை
10 முந்திரி
10 திராட்சை
½ டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி
¼ கப் நெய்
செய்முறை
அரிசி, பாசிப் பருப்பை கழுவ வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராச்சை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் அரிசி- பருப்பை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பால், தண்ணீர் சேர்க்கவும். இதை கொதிக்க வைக்கவும்.
இதை குக்கரில் வைத்து 4 விசில் விட்டு, நன்றாக வேக வைக்கவும். நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும், மசித்ததை சேர்க்கவும். தொடர்ந்து பால் சேர்க்கவும். இதில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் வெல்லம் சேர்க்கவும். தீயை குறைவாக வைக்கவும். தொடர்ந்து இதில் ஏலக்காய் பொடித்ததை சேர்த்து கிளரவும்.