வங்கி கணக்கை முடிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை
வங்கியின் சேமிப்பு கணக்கை முடிக்க கடிதம் எழுவது குறித்து இங்கே காண்போம்.
வங்கி மேலதிகாரிக்கு கடிதம் அனுப்பி வங்கிக் கணக்கை முடிப்பது ஒரு முறை ஆகும்.
பணியிட மாற்றம் காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ சேமிப்பு கணக்கை சிலர் முடிப்பர்.
அதற்கு எளிய முறையில் கடிதம் எழுவது எப்படி என்பது குறித்து இங்கே காண்போம்.
வழக்கமான கடிதம் போல அனுப்புநர், பெறுநர், ஐயா/அம்மா, பொருள் என்பதை கடிதத்தில் நிரப்ப வேண்டும். பொருள் என்ற இடத்தில் ‘வங்கி கணக்கை முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பாக’ என குறிப்பிட வேண்டும்.
அடுத்து ”வணக்கம், நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்—. நான் சொந்த காரணங்களுக்காக தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கை தொடர விரும்பவில்லை. எனவே எனது வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என காரணத்தை நிரப்ப வேண்டும்.
அதன் கீழே நாள், இடம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பு: உங்களுக்கு வேறொரு வங்கியில் வங்கி கணக்கு இருந்தால், நீங்கள் முடித்து வைக்க கோரும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த வங்கி கணக்குக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம்.
அப்போது அந்த வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code போன்றவற்றை கடிதத்தில் சுட்டி காட்ட வேண்டும்.