வங்கிக் கணக்கை EPFO-வில் இணைக்க வேண்டுமா?
EPFO என்னும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை அவர்களது வருங்கால தேவைக்காக புதிய கணக்கை துவங்கி “ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமித்து” வைக்கும் நிறுவனமாகும். இவ்வாறு சேமிக்கப்படும் தொகை PF தொகை அல்லது வருங்கால வைப்பு நிதி என்றழைக்கப்படும். இந்த PF தொகைக்கு 8.25% வட்டியாக EPFO நிறுவனத்தால் வழங்கப்படும். இவ்வட்டி தொகையானது சந்தாதாரர்களின் PF கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த PF பணத்தை சந்தாதாரர்கள் கணக்கு துவங்கி 05 ஆண்டுகள் முழுமை அடைந்த பின் அல்லது பணியில் இருந்து விலகிய பின் பெற்று கொள்ளலாம். அவ்வாறு இந்த PF பணத்தை எடுக்க விரும்பும் நபர்கள் தங்களது சரியான வங்கிக் கணக்கை PF கணக்குடன் இணைக்க வேண்டியது அவசியமானது ஆகும். மேலும் புதிய கணக்கு விவரங்களை புதுப்பிக்காமல் தங்கள் வங்கிக் கணக்கை மூடி இருந்தால் அதை உடனே பிஎஃப் கணக்கிலும் அப்டேட் செய்ய வேண்டியது அவசியம்.
1. முதலில் EPFO இல் உங்கள் உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும்.
2. ‘நிர்வகி’ (manage) எனும் ஆஃப்சனை கிளிக் செய்யவும்.
3. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘KYC’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் IFSC குறியீட்டை உள்ளிடவும். பின்னர் ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
5. உங்கள் முதலாளி/ நிறுவனத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்களின் சமீபத்திய வங்கி விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் தெரியும்.