சாரதிகளின் அலட்சியம்: ஆந்திர மாநில தொடருந்து விபத்து தொடர்பில் இந்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான காரணம் சாரதிகளின் அலட்சியமே என இந்திய மத்திய தொடருந்து அமைச்சர் விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா – ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இடம்பெற்ற குறித்த விபத்துக்கு காரணம் தொடருந்து சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என அவர் தெரிவித்துள்ளதாக குறித்த செய்திக்குறிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சாரதிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
உறுதி செய்யப்படும் பாதுகாப்பு
மேலும், பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், தொடருந்து சாரதிகள் பணிதொடர்பில் உறுதி செய்யும் கருவிகளும் பொருத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்காலத்தில், தொடருந்து பயணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், விபத்துகள் தவிர்க்கப்படும் என இந்திய மத்திய தொடருந்து அமைச்சு தெரிவித்துள்ளது.