Nellai Flood: வெள்ளத்தில் இழந்த ஆவணங்கள்..சிறப்பு முகாம் அறிவித்த கலெக்டா்!

திருநெல்வேலியில் வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நாளை(ஜனவரி 8) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் கட்டணமின்றி புதிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அளவுக்கு அதிகன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனா். கிட்டதட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் குடிநீர், உணவின்றி தத்தளித்தனர்.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசு மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் உடை, உடைமை மற்றும் பொருட்கள், முக்கிய ஆவணங்களைப் பறிகொடுத்தனர். இதனால், நெல்லையில் வெள்ளத்தில் ஆவணங்களை இழந்த பொதுமக்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்களுக்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களுக்கு நாளை(ஜனவரி 8) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் கட்டணமின்றி புதிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறுகையில்,” வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஜனவரி 8) சிறப்பு முகாம் தொடங்க உள்ளது. அதில் ஆவணங்களை இழந்தவர்கள் கட்டணமின்றி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *