|

மாலத்தீவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்… கேன்சலாகும் ஹனிமூன் பயணங்கள்? – பின்னணி என்ன?

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தை தொடர்ந்து, மாலத்தீவு அமைச்சர் ஒருவர் இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, அவர் X தளத்தில் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த டிரெண்டிங்கை முன்னிட்டு, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயண புகைப்படங்கள், வீடியோக்களை நாடு முழுவதும் உள்ள நெட்டிசன்கள் பதிவிட்டு மாலத்தீவிற்கும் பதிலாக லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லும்படி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் தங்களுக்கு விரோதமாக இருக்கும் நாட்டிற்கு இந்தியர்கள் செல்லக்கூடாது என்று கூறி மாலத்தீவுகளை புறக்கணிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்று, மாலத்தீவு. இருப்பினும், மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியூனா பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த பிறகு, அங்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒருவர் லட்சத்தீவின் வியக்கவைக்கும் இயற்கை சார்ந்த புகைப்படங்களை பதிவிட்டு, லட்சத்தீவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். மேலும், அதில் மாலத்தீவை புறக்கணிக்கும்படி கருத்தும் தெரிவித்திருந்தார். நெட்டிசன்கள் மட்டுமின்றி பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சல்மான் கான், ஷ்ரத்தா கபூர், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோரும் லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லும்படி பரப்புரை செய்து பதிவிட்டு வருகின்றனர். மூத்த கிரிக்கெட் வீரர் சச்சினும் இந்திய தீவுகளுக்கு ஆதரவளிப்போம் என்று #ExploreIndiaIslands என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அவரின் பதிவில்,”இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை கூறும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களை கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் ஒரு நாட்டை இப்படி குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அண்டை வீட்டாரிடம் நாம் எப்போதும் நல்லவர்கள்தான். ஆனால் இத்தகைய வெறுப்பை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?. நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன், எப்போதும் அதைப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் கண்ணியம்தான் முதன்மையானது. இந்திய தீவுகளுக்குச் சென்று (#ExploreIndiaIslands) நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

சல்மான் கான் அவரது X பக்கத்தில்,”நமது பிரதமர் நரேந்திர மோடியை லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது, மேலும் சிறந்த அம்சம் என்றவென்றால் இந்த தீவுகள் இந்தியாவில் உள்ளன” என பதிவிட்டு மாலத்தீவை சாடாமல் லட்சத்தீவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

,”சிந்துதுர்க்கில் (மகாராஷ்டிர கடற்கரை நகரம்) எனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினோம், தற்போது 250+ நாட்கள் ஆகிவிட்டது. அந்த கடற்கரை நகரம் நாங்கள் விரும்பும் அனைத்தையும் வழங்கியது. மேலும் பலவற்றையும். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை எங்களிடம் விட்டுச் சென்றன.

இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது ‘அதிதி தேவோ பவ’ தத்துவத்தின் மூலம், நாம் பயணிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது, பல இடங்கள் உங்களுக்கு சிறந்த நினைவுகளை உருவாக்க காத்திருக்கின்றன” என பதிவிட்டுள்ளார். இவரும் மாலத்தீவு பிரச்னையை குறிப்பிடாமல் இந்திய சுற்றுலாவை அதிகரிக்கச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாலத்தீவுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் பலரும் தங்களின் பயணங்களை ரத்து செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *