ரேஷன் கார்டில் புதிய மாற்றம்.. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
அதே சமயம் ரேஷன் கார்டு தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சண்டிகர் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு சுமார் 77 லட்சம் ரேஷன் கார்டுகள் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை ரேஷன் கார்டுகளில் முன்னால் முதல்வரின் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு காவி நிறத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
தற்போது மாநில அரசின் முதல்வர் மற்றும் உணவுத்துறை அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய நிறமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி பிப்ரவரி மாதம் முதல் தொடங்கப்படும் எனவும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் 77 லட்சம் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.