ரேஷன் கடைகளில் புதிய முயற்சி..! காணொலி வாயிலாக தொடக்கம்..!
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரின் அன்றாட உணவிலும் பெரும்பங்கு வகிப்பது அரசின் ரேஷன் திட்ட உணவு பொருள்கள் ஆகும். ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை நியாயமான முறையில் வழங்குவதற்கு அரசு தேவையான முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக மின்னணு இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு மத்திய அரசின் உணவு பொது விநியோக துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா அவர்கள முதல் கட்டமாக இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் போன்ற மாவட்டங்களில் திறந்த வெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாயவிலை கடைகள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
காணொலி காட்சி வாயிலாக மொத்தம் 11 நியாய விலை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வேளாண் வணிகர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான கூடுதல் வழிகள் கிடைக்கும் என்றும், பயனாளிகளின் மனநிறைவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகளுக்கு வாடிக்கையாளர் தளத்திற்கான அணுகல், சில்லறை விற்பனையாளர்கள் மின் வணிக தளங்களுடன் சமமாக போட்டியிடும் திறன், முகவர்களுக்கு மின்னணு சந்தையில் தெளிவுநிலை போன்ற பல்வேறு நன்மைகள் இத்திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இணையதளத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்ப்பதற்கு நியாய விலை கடை முகவர்களை பொதுமக்கள் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.