அமாவாசை 2024: செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் என்னென்ன?

இந்து மதத்தில் அமாவாசைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. இந்த நாளில் நீராடுதல் மற்றும் அன்னதானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆசிகள் வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. இந்த நாளில், விரதம் மேற்கொளவதன் மூலம் ஒருவர் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடுகிறார் மற்றும் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு முதலில் வரும் அமாவாசை எப்போது வருகிறது? அன்று முக்கியமாக நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

1. அமாவாசை நாளில் அசைவம் சாப்பிடுவது, பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, தானியங்கள் மற்றும் மாவுப் பொருட்கள் வாங்குவது, திருமண சடங்குகளை நடத்துவது, மங்கள நிகழ்வுகளை நடத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

2. இந்த நாளில் புதிய தொழில் அல்லது பண பரிவர்த்தனை செய்வது, பெரிய முதலீடுகள் செய்வது ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

3. அமாவாசை நாளில் துக்க காரியங்கள் நடக்கும் இடங்கள், இடுகாடு போன்ற இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

4. அமாவாசை நாளில் தீய சக்திகள் அதிக வீரியத்துடன் காணப்படும் என்பதால் இவற்றால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

5. தெய்வங்கள் மற்றும் முன்னோர்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அரச மரத்தடியில் விளக்கேற்றி வழிபடுவது ஆகியவை சிறப்பானதாகும்.

6. இது பித்ருக்களுக்கு உரிய நாள் என்பதால் பித்ரு பூஜை செய்து, பிண்டம் வைத்தும், முன்னோர்களுக்கு படையில் இட்டு படைத்தும் வழிபட்டும் அவர்களின் ஆசியை பெற வேண்டும்.

7. அமாவாசை அன்று கோபப்படுவது, சண்டை போடுது, அழிவு தொடர்பான விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மார்கழி மாத அமாவாசைக்கு மற்றொரு மிக முக்கியமான சிறப்பு, இது அனுமன் அவதரித்த திருநாளாகும். இதை தென்னிந்தியாவில் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் விரதமிருந்து அனுமனை வழிபடுவது, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது சனி தோஷத்தில் இருந்து விடுபட செய்யும். அதோடு இந்த நாளில் தனலட்சுமியையும், தானிய லட்சுமியையும் வழிபடுவதால் குறைவில்லாத செல்வம், அதிர்ஷ்டம் ஏற்படும். அதோடு ராகு, கேது, சனி போன்ற கிரகங்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்தும் விடுபட முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *