கார்த்தி சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை தாக்கல்

கடந்த 2011ம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, சீன நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விசா பெற்று தந்ததற்காக, வேதாந்தா குழும நிறுவனத்திடம் ₹50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த 2022ல் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அவரது நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் எஸ்.பாஸ்கரராமனை கைது செய்தது.
இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் பலமுறை ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை நேற்று புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.